அம்பாறை - காரைதீவு மாவடிப்பள்ளியை அண்மித்துள்ள பாலத்தில் உழவு இயந்திரமொன்று நேற்று (27) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன 02 சிறுவர்கள் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஏனைய 04 சிறுவர்களையும் உழவு இயந்திரத்தின் சாரதி அதில் பயணித்த ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நிந்தவூர் மதரஸா பாடசாலையில் கல்வி கற்ற சிறுவர்கள் சிலர் நேற்று பிற்பகல் வீட்டிற்கு பயணித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
.jpeg)