காத்தான்குடியில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம்!!


சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட காத்தான்குடி 06, தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தின் சிறுவர் தின  கொண்டாட்ட நிகழ்வு இன்று (01) செவ்வாய்க்கிழமை  முற்பகல் காத்தான்குடி நதியா கடற்கரை முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது. 

பாடசாலையின் அதிபர் ஏ.எல்.முனீர் தலைமையில்  "பிள்ளைகளைப் பாதுகாப்போம், சமமாக மதிப்போம்" எனும் சர்வதேச தொனிப்பொருளின் கீழ் இந் நிகழ்வு நடைபெற்றது. 

இந் நிகழ்வில் சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களினால் வடிவமைக்கப்பட்ட பல கலை நிகழ்ச்சிகள்  முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலைஞர் எம்.ஐ.எம்.முஸ்தபா, ஊர் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.








Powered by Blogger.