எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கான தெளிவூட்டல் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எ.எம்.சுபியானின் ஒழுங்கு படுத்தலின் கீழ் குறித்த தெளிவூட்டல் செயலமர்வு இடம் பெற்றது.
இதன் போது அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தேர்தல் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டி விடையங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டது.