மட்டக்களப்பு கல்லடி கடற்கரை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதுடன் அப்பிரதேசங்களை மக்கள் பயன்படுத்தும் வகையிலும் வருகின்ற சனிக்கிழமை 28 ஆம் திகதி கடற்கரை ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் சிரமதான பணிகளை மேற்கொள்ள உள்ளதாக மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் தலைவர் டாக்டர் கே.முரளிதரன் இன்று (25) திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் சமூகத்துக்கும் சூழலுக்கும் ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்காகவே பல விதமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் இலங்கையில் உள்ள சகல றோட்டரி கழகங்களும் சேர்ந்து 28ஆம் திகதி சனிக்கிழமை காலை, நாடளாவிய ரீதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதும் அதன் மூலம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உண்டாக்குவதுமான திட்டத்தை கொள்ளவுள்ளோம்.
அதே வேளை கல்லடி பிரதேசத்தில் தற்போது அதிகளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுவதனால் அந்த பகுதியில் சுத்திகரிப்பு திட்டம் மூலம் விழிப்புணர்வை உருவாக்கி அந்த சுத்திகரிப்பின் மூலம் மக்களிடையே சில விழிப்புணர்வை உண்டாக்குவதற்கு நாங்கள் முனைகிறோம் வருகின்ற சனிக்கிழமை 28ஆம் திகதி செப்டம்பர் காலை 6 மணிக்கு கல்லடி கடற்கரையில் ஒன்று கூடி சுத்திகரிப்பு நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.