மின்னியலாளர்களுக்காக மட்டக்களப்பில் நடைபெறும் மூன்று நாள் செயலமர்வு!!


தகுதி வாய்ந்த மின்னியலாளர்களை உருவாக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் செயலவர்வானது இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவும் பொலிக்குறோம் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த மின்னியலாளர்ளை வலுப்படுத்துவதற்கான மூன்று நாள் பயிற்சி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு இன்று (26) திகதி மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன்  அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வானது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர்  ஜயனாத் ஹேரத் தலைமையில் நடைபெற்றது.

42 வருட அனுபவமும், தரமான உற்பத்தியுடனும் மக்கள் அபிமானம் பெற்ற பொலிக்குறோம் நிறுவனத்தின் அனுசரனையில் இடம் பெற்ற நிகழ்வில் பொலிக்குறோம் நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர் தம்மிக்க பண்டார, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் ஜயசூரியன், பொலிக்குறோம் நிறுவனத்தின் நாம முகாமையாளர் அமித் எசங்க, பொலிக்குறோம் நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர், மாவட்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சிவகுமார் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த அதிகளவிலான மின்னியலாளர்கள் கலந்து கொண்டதுடன் குறித்த செயலமர்வானது மூன்று நாட்கள் இடம் பெற்று இறுதியில் இடம்பெறும் பரீட்சையில் சித்தியடையும் மின்னியலாளர்களுக்கு தேசிய தொழில் தகமைச் சான்றிதழ் (NVQ) வழங்கிவைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







Powered by Blogger.