வாக்கெண்ணும் நிலையமான மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் முன்னாயத்தம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கள ஆய்வு!!
இலங்கை சனநாயக குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையமான மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று (17) திகதி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக் கள ஆய்வில் மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக உரிய திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இக் கள விஜயத்தின் போது மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம்.சுபியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.