2024 ஜனாதிபதி தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக மொத்தம் 736,589 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விண்ணப்பங்களில் 24,268 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 712,321 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.