ஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பில் பல்கலைக்கழகம் திறந்து வைப்பு!!

மட்டக்களப்பு புனானையில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர் களினால் இன்று (20) திகதி மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

முன்னால் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், நிகழ்விற்கு விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், வடக்கு மாகாண ஆளுனர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், முன்னால் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

இதன் ஜனாதிபதி அவர்களினால் நினைவு முத்திரை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள், அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
















Powered by Blogger.