மட்டக்களப்பை வரவேற்கும் பெயர்ப் பலகை மட்டு றோட்டரி கழகத்தினரால் திறந்து வைப்பு.

மட்டக்களப்பு நகர் பகுதியை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு திருக்கோணமலை பிரதான வீதி, சத்துருகொண்டான் பிரதேசத்தில் மட்டக்களப்பு நகர் றோட்டரி கழகத்தினர் சுமார் 3.5 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "மட்டக்களப்பு வரவேற்கின்றது" எனும் பெயர்ப் பலகையினை இன்று (24) காலை 10.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் தலைவர் தேசபந்து எஸ்.செல்வராசா அவர்களின் மேற்பார்வையில் இப் பெயர் பலகையின் நிர்மானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு அவர் தலைமையில் இன்றைய தினம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி இ.கருணாகரன் உள்ளிட்ட றோட்டரி கழகத்தின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









Powered by Blogger.