கிழக்கு மாகாணத்தின் முதலாவது சூழல் பாதுகாப்பு பிரதேசமாக எத்தாலைக் குளம் பிரகடனம்!!

கிழக்கு மாகாணத்தின் முதலாவது சூழல் பாதுகாப்பு பிரதேசமாக மட்டக்களப்பின் குருக்கள்மடம் ஏத்தாலைக்குளமானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக  பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில்  பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் குருக்கள்மடம் ஐயனார் ஆலய முன்றலில் திரை பலகையை உத்தியோகபூர்வமாக  இன்று  (05) திகதி   திறந்து வைத்தார். 

எமது நாட்டுக்கு உரித்தான 36 வகையான பறவை  இனங்கள் மற்றும் வேடன் தாங்கள் பறவைகள் இனப் பெருக்கத்திற்காக இங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஜப்பான், நெபாளாம், ஐரோப்பி நாட்டு பறவை இனங்கள் இங்கு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களிடம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்  தம்மிக்க கருணாரத்ன வர்த்தமானி பத்திரத்தை உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி  சிவப்பிரியா வில்வரத்தினம், காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயஶ்ரீதர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் திருமதி பிரியாங்கனி குனதிலக்க, கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் என்.ஜேகநாத், உயர் அதிகாரிகள், பொலிசார் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.