உதயம் விழிப்புலனற்றோருக்கான வாழ்வாதார உதவித்திட்டம்!!

உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தினூடாக விழிப்புலனற்றோருக்கு சித்திரை வருட பிறப்பினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் பி.டிசாந்தன் தலைமையில் சங்க வளாகத்தில் (11) திகதி இடம் பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

சித்திரை விருட பிறப்பினை முன்னிட்டு விழிப்புவனற்றோரும் இவ் வருட பிறப்பை மகிழ்வாக கொண்டாடுவதற்கு புத்தாடைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை பிரித்தானிய வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதி உதவியின் கீழ் வழங்கப்பட்டதுடன் இத்திட்ட முகாமைத்துவத்தினை அகிலன் பவுண்டேசன் இலங்கை நிறுவனம் மேற்கொண்டது.

இந் நிகழ்வில் விழிப்புலனற்றோர்களால் தமது வாழ்வாதாரத்தை  மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் காணி ஒன்றினை வழங்குமாறு அரசாங்க அதிபரிடம் கொரிக்கை முன்வைத்தனர்.

இதன் போது உதயம் உறுப்பினர்களினால் சேவிக்கு இனிமையான பாடல்கள், கவிதைகள் இசைக்கப்பட்டது  சிறப்பம்சமாகும். மேலும் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தில் அதிகலவான உறுப்பினர்கள் பட்டதாரியாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் பங்கு பற்றிய அனைவருக்கும் புது வருட கைவிசேடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் விமல்ராஜ், திருகோணமலை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருன்மொழி, அகிலன் பவுண்டேசன் நிறுவன பணிப்பாளர் ஆர். மகேந்திரன், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஆ.யோகராஜா, உதயம் அமைப்பின் ஆலோசகர்கள், உதயம் விழிப்புலனற்றோர் சங்க  பொருளாளர் ஜதிஸ், நிருவாக குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.