முற்போக்குத் தமிழர் கழகத்தின் இளைஞர் பாசறை நடாத்திய இளைஞர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை (23) மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஆரம்பத்தில் முற்போக்குத் தமிழர் கழகத்தின் தலைவரும், வர்த்தக, வாணிப இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் ஆதரவாளர்கள் புடைசூழ மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்திலிருந்து ஊர்வலமாக மாநகர மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
முற்போக்குத் தமிழர் கழகத்தின் தலைவரும், வர்த்தக, வாணிப இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், ஆரம்ப நிகழ்வாக மூன்று மாவீரர்களை மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்த வீரத்தாய் திருமதி பத்மாவதி வன்னியசிங்கம் பிரதான தீபச்சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம், அதிதிகள் உரைகள் என்பன நடைபெற்றன.
இதன்போது முற்போக்குத் தமிழர் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.