மட்டக்களப்பில் கோர விபத்து - இளைஞர் பலி!!


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் வந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு கேக் வெட்டுவதற்காக சென்று வருகை தந்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி அருகில் இருந்த புளியமரத்தில் மோதுண்டதனால் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதன் போது மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய இளைஞர் தற்போது மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

எருவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் இவரே மோட்டார் சைக்கிளை செலுத்தியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.Powered by Blogger.