ஏறாவூர்பற்றிற்கு நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக நஸீர் சத்தியப்பிரமானம்!!


ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக ஏறாவூர் எம்.எஸ்.எம்.நஸீர் சத்தியப் பிரமானம் செய்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கான மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட் ஏறாவூர் எம்.எஸ்.எம்.நஸீர் அவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் கௌரவ நீதிபதி அவர்களின் கட்டளைக்கு அமைவாக தனது கடமையினை சிறப்பாக செய்து வந்தார்.

இவரது சிறப்பான சேவைகளை கவனத்தில் கொண்ட நீதி அமைச்சு, 70 வயது வரைக்குமான நிரந்தர மரண விசாரணை அதிகாரியாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவின் அனைத்து கிராம சேவகர் பிரிவுக்குமாக 01-08-2023 இலிருந்து நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந் நியமணத்திற்கான சத்தியப் பிரமான நிகழ்வு கடந்த (06) திகதி காலை மட்டக்களப்பு நீதிவான் நீதி மன்ற நீதிபதி கௌரவ ஏ.பீட்டர் போல் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.


Powered by Blogger.