காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!


மட்டக்களப்பு காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் முகமாக அணிக்கு ஏழு பேர் கொண்ட லீக் முறையிலான மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது அக் கழகத்தின் தலைவர் பிரேமச்சந்திரன் தலைமையில் காந்தி ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் கடந்த 9 நாட்களாக மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றிருந்தது. 

நாடளாவிய ரீதியில் 64 கழகங்கள் பங்கு பற்றிய இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியானது வாழைச்சேனை அன்னை வேளாங்கன்னி அணியினருக்கும் நீர் கொழும்பு கப்பிட்டல் அணியிருக்கும் இடையே இடம்பெற்றிருந்தது.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப் போட்டி நிகழ்வின் போது நீர் கொழும்பு கப்பிட்டல் அணியினர் வெற்றிக்கிண்ணத்தினை தமதாக்கி கொண்டனர். 

குறித்த போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் கலந்துகொண்டு வெற்றியீட்டிய அணியினருக்கு வெற்றிக்கிண்ணங்களையும், பணப் பரிசில்களையும், பதக்கங்களையும் அணிவித்து கௌரவித்துள்ளார்.

குறித்த நிகழ்வின் போது சிறப்பு அதிதியாக சண்முகலிங்கம் சுரேஷ்குமார் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி விளையாட்டுக் கழக வீரர்கள், பார்வையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
Powered by Blogger.