மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மருத்துவ முகாம்!!


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மருத்துவ முகாம்மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில்  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இன்று (22) இடம் பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகமும்  மாவட்ட செயலகமும் இணைந்து தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

தற்போதைய காலத்தில் தொற்றா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால் உத்தியோகத்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் இந்நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன்  வைத்தியர்களினால் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந்த், சுகாதார வைத்திய அதிகாரி பிரசாந்தி லதாகரன், பிராந்திய உள நல மருத்துவர் டான் செளந்தரராஜா, புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் எஸ்.தீபக்குமாரன் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கத்தின் ஆதரவுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.















Powered by Blogger.