செங்கலடி பிரதேச செயலகத்தில் மூன்றாவது மாபெரும் இரத்ததான நிகழ்வு!!


ஏறாவூர்ப்பற்று   செங்கலடி   பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த வருடாந்த இரத்ததான நிகழ்வு  பிரதேச செயலாளர் கோ. தனபாலசுந்தரம் தலைமையில் மூன்றாவது தடiவாயக இன்று (23) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப் பொருளில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்று வரும் இவ்விரத்ததான நிகழ்வினூடாக அப்பிரதேச மக்களின் நலனுக்காக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையட்டுக் கழக வீரர்கள், சமுக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் உதிரக் கொடை கொடுக்கும் சமுகப் பணியில் ஈடுபட்டனர்.

பிரதேச செயலாளர் தனபாலசுந்தரத்தின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  ஆ. சுதாகரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இவ்விரத்ததான நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொருப்பான வைத்திய அதிகாரி தலைமையிலான தாததியர் குழு இன்றைய இரத்ததான நிகழ்வில் உதிரம் சேகரிக்கும் நடவடிக்கையில்  ஈடுபட்டனர். 

இன்றைய இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச  இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள், மாதர் சங்கங்கள் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், ஏறாவூர் நகர  இளைஞர்கள் என பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்தனர். 

இந்நிகழ்வை ஊக்குவிக்கும் விதமாக “அகம்”  இளைஞர் அபிவிருத்தி அமைப்பினால் இரத்த தானம் செய்த கொடையாளிகளுக்கு நினைவுச் சின்னமாக மாமரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















Powered by Blogger.