சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 1% குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
அமெரிக்க டொலர் வலுவடைந்தமை, சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
இதன்படி, உலக சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.74 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை 82.12 டொலராகவும் குறைந்துள்ளது.