ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னால் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்குமிடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் நோக்கில் கடந்த சில நாட்களாக பல்வேறு தரப்பினரையும் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க சந்தித்து கலந்துரையாடி வரும் நிலையில், குறித்த விடையம் தொடர்பில் முன்னால் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை அழைத்து இன்று (07) திகதி காலை 10.00 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் வைத்து பல மணிநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய போது நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதன் ஊடாக நாட்டு மக்களது பொருளாதார சுமையை குறைக்க தனது பூரண ஒத்துழைப்பை ஜனாதிபதிக்கு வழங்க தான் தயாராக இருப்பதாக, ஜனாதிபதியிடம் தான் தெரிவித்ததாக சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் முன்னால் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன்,
எதிர்வரும் திங்கட்கிழமை முன்னால் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஜனாதிபதியினால் பொறுப்பு வாய்ந்த பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகம் நம்பத்தகு வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.