சமூக பாதுகாப்பு சபையின் தேசிய விருது விழாவில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு விருது!!


மண்முனை வடக்கு பிரதேச செயலகம் தேசிய ரீதியில் உள்வாங்கப்பட்டு மாகாண ரீதியில் ஆறாவது இடத்தினையும், மாவட்ட ரீதியில் மூன்றாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இதற்கு அமைவாக பிரதேச செயலகம் சார்பில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர், சமூக பாதுகாப்பு சபை உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளை இணைத்துக்கொண்ட இரண்டு உத்தியோகத்தர்களும் பிரதேச செயலகம் சார்பில் (Blue velvet, Medals and certificate) வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் டேபா மண்டபத்தில் நேற்று (17) இடம்பெற்றது.

இதில் சமூக பாதுகாப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அத்தோடு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


Powered by Blogger.