மட்டக்களப்பில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - கிழக்கு மாகாண ஆளுனர் பிரதம அதிதியாக பங்கேற்பு!!


விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் கற்கையை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்   வழங்கும் நிகழ்வு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா மஹாராஜ் தலைமையில்  விபுலானந்தா மண்டபத்தில் இன்று (20) திகதி இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்  சுவாமி விபுலானந்தரின் சமாதியில் மலர்தூவி வழிபாடுகளில் ஈடுபட்டார்.

கலை கலாசார நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் கற்கையை பூர்த்திசெய்த மாணவ மாணவியர்களுக்கு அதிதிகளினால் இதன்போது சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கிழக்கு ஆளுனரின் தன்னலமற்ற சேவையினை பாராட்டி இராமகிருஷ்ண மிஷன்  சுவாமிகளினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.

விவேகானந்தா மனித வள மேம்பாட்டு நிலையத்தில் மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்வதற்காக சிறந்த கற்கைநெறிகள்  கற்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயளாளர் வி.வாசுதேவன், மாநகர ஆணையாளர் எந்திரி சிவலிங்கம், மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
Powered by Blogger.