தங்கத்தின் விலை பாரியளவு வீழ்ச்சி!!


டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று(06) 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,288 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 146,302 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 134,110 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 16,764 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 16,002 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 128,014 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 568,813 ரூபாவாக பதிவாகியுள்ளது. தங்கம் அவுன்ஸின் விலை 2023 ஜனவரி 2 ஆம் திகதி 667,524 ரூபாவாக காணப்பட்டது.

இதற்கமைய தங்கம் அவுன்ஸின் விலை கடந்த 6 மாதங்களுக்குள் 98,711 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.