இரு குழந்தைகளை முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்ற தாய்!!


தாயொருவர் தனது 9 வயது மகனையும் 6 மாத கைக் குழந்தையையும் முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்ற சம்பவமொன்று அம்பலாங்கொடை பகுதியில் பதிவாகியுள்ளது.

பெண்ணொருவர் தம்மிடம் வந்து 2 பிள்ளைகளை கொடுத்து சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு கூறிச் சென்றதாகவும் நீண்ட நேரமாகியும் குறித்த பெண் திரும்பி வராததால் பிள்ளைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க தாம் வந்ததாகவும் முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணை நடத்திய அம்பலாங்கொடை பொலிஸார் தாய்ப்பாலின்றி நோய்வாய்ப்பட்டிருந்த 6 மாத கைக்குழந்தையை பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த 2 பிள்ளைகளையும் நேற்று(13) நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாகவும் அவர்களை சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாய் போதைப் பொருளுக்கு அடிமையானர் எனவும் அவரை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Powered by Blogger.