மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய கோவிலூர் செல்வராஜனின் பொன்விழா நிகழ்வும், இலக்கியத் தென்றல் மலர் வெளியீடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புலவர் விநாயகமூர்த்தி ரஞ்சித மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
காலை ஒன்பது முப்பதுக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கோபால ரத்தினம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இவ்விழாவில், கலைஞர், பன்முக ஆளுமையாளன், எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன், பொன்விழா நாயகனாக கௌரவிக்கப்பட்டதோடு அவருக்கு இலக்கியத் தென்றல் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.








 
 
 
 
 
 
 
 
 
