"புகைத்தலிலிருந்து மீண்ட ஒரு கிராமம் மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் தேசம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கொடி விற்பனை நிகழ்வு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு வாசகங்கள் அச்சிடப்பட்ட கொடிகள் பிரதேச செயலக உத்தியோத்தர்களிடையே பரிமாறப்பட்டு, அணிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.