கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆளுநரால் 350 விவசாயிகளுக்கு நீர்ப்பம்பிகள் வழங்கி வைப்பு!


கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நீர்ப்பம்பிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (10.06.2023) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு, கல்லடி சன்சைன் கிறான்ட் மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு இடம்பெற்ற  இந்நிகழ்வில்,

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன், நவீனமயமாக்கல் திட்டத்தின் கிழக்கு மாகாண பிரதித் திட்டப்பணிப்பாளர் கே.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள்,  மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது தேர்ந்தெடுக்கப்பட்ட  விவசாயிகளுக்கு முதல்கட்டமாக 350 நீர்ப்பம்பிகள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

Powered by Blogger.