மட்டக்களப்பு ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா!!


காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயத்தின்  முப்பெரும் விழா பாடசாலை அதிபர் எஸ்.ஐ யசீர் அரபாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை (23) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

2022 (2023) க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு மற்றும் சேவை நலன் பாராட்டு, Smart School Energy System அங்குராப்பண நிகழ்வு ஆகிய மூப்பெரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்   பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்  பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் கெளரவ அதிதியாகவும்  காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, முன்னால் காத்தான்குடி நகரசபை தவிசாளர்  எஸ்.எச்.எம்.அஸ்பர், மாணவர் சிப்பாய் படையனியின் கிழக்குமாகாண பிரதிப் பணிப்பாளர் லெப்டினல் கேனல் ஜீ.டபிள்யூ. ஜீ.எச்.நிலந்த மற்றும் மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் கல்வியாளர்கள், ஊர் பிரமுகர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மத்தி  வலயக்கல்விப் அலுவலகத்தின் முன்னால் வலயக்கல்வி பணிப்பாளரும் தற்போதைய சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளருமான எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்களின் சேவையை பாராட்டியும், Smart School Energy System த்தினை பாடசாலையில் அமுல்ப்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய எப்.எம்.முனீர் உள்ளிட்ட இருவருக்கும் இதன்போது அதிதிகளினால் பென்னாடை போர்த்தி சினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.