க.பொ.த பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி : இம்முறை மட்டக்களப்பில் 15900 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்!!

கொரோனா தொற்று  நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த வருடம் (2022)  டிசெம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த கல்விப்  பொதுத் தராதர  சாதாரண தரப் பரீட்சை மே 29ஆம்  திகதி திங்கட்கிழமை நாளை ஆரம்பிக்கப்பட்டு, ஜூன் 8 ஆம் திகதி வியாழக்கிழமை  நிறைவடையவுள்ளது. 

இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர  சாதாரண தரப்  பரீட்சைக்கு மட்டக்களப்பு  மாவட்டத்திலும் சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில்  மாவட்டத்திலுள்ள 5  கல்வி வலயங்களில் இருந்து இம்முறை 15900 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்பரீட்சையினை நடாத்துவதற்காக ஒருங்கினைப்பு மத்திய நிலையங்கள் 14 மற்றும் பரீட்சை மத்திய நிலையங்கள் 119 வும் நிறுவப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  பாடசாலை பரீட்சார்த்திகள் 10518  பேரும், தனியார் பரீட்சார்த்திகள் 5382 பேரும் இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், இவர்களில்  7638  ஆண் பரீட்சார்த்திகளும்  8496 பெண்  பரீட்சார்த்திகளும்  தேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.