முட்டை விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!


தற்போது வெள்ளை முட்டை ஒன்றுக்கு 44 ரூபா, சிவப்பு முட்டைக்கு 46 ரூபா என கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் விதித்துள்ளது.

ஆனால், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கே சந்தையில் முட்டை விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், நேற்று (17) புறக்கோட்டையில் முட்டைகள் நிறைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுவதாகவும், முட்டைகளை நிறைக்கு ஏற்ப விற்பது சட்டத்திற்கு முரணானது என்பதால், நுகர்வோர் விவகார அதிகாரசபை குறித்த கடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

மே மாதம் முதலாம் திகதி முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட குறைவாகவே முட்டை விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று (17) அறிவித்துள்ளது.

அதன் பின்னரும் முட்டையின் விலை படிப்படியாக குறையும் என அதன் தலைவர் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.