திருக்கோவிலில் கைகுண்டு மீட்பு!!


திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி பிரதேசத்திலுள்ள தனியார் காணி ஒன்றில் நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று இன்று (9) திகதி மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு சொந்தமான காணியில் சம்பவதினமான இன்று காலை விடுதி காவலாளி காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நிலத்தில் புதையுண்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினரை வரவழைத்து குண்டை செயலிழக்கச் செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Powered by Blogger.