மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்த தான முகாம்!!


2019.04.21 அன்று உயிர் நீத்த உறவுகளின் நான்காம் ஆண்டு நினைவாக "எங்கள் உதிரம் கொண்டு அஞ்சலி செலுத்துவோம்" எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட இரத்த தான முகாம் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (21) தாண்டவன்வெளி பெடினன்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கலாராணி, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி நிஷாந்தி அருள்மொழி, இளைஞர் சேவை அதிகாரி R.பிரவீன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழங்களின் சம்மேளன தலைவர் கே. யுவபிரகாஸ், மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் எஸ். லவன்ராஜ், செயலாளர் எஸ்.சுஜீவா மற்றும் சம்மேளன உறுப்பினர்கள், மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஆலோசகர் இ.செந்தூரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பல இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதுடன், இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Powered by Blogger.