அட்சய திருதியை அன்று பல்லி தரிசனம் செய்தால் உங்களது ஏழேழு ஜன்மத்து பாவமும், உங்களை பிடித்த பீடையும், தரித்திரம் விலகும்!!!

அட்சய திருதியை அன்று  உங்கள் வீட்டு மூலை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் இதை மட்டும், எப்பாடு பட்டாவது ஒருமுறை பார்த்தால் போதும். ஏழேழு ஜென்மத்து பாவத்தையும் தீர்த்து விடலாம்.

உங்களுடைய வீட்டில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் உலாவிக் கொண்டிருக்கும் இந்த ஜீவராசி, இன்று காலையிலிருந்து உங்களுடைய கண்களில் பட்டதா? நிச்சயம் உங்களால் இந்த ஜீவ ராசியை, இன்று காலையில் இருந்து தரிசனம் செய்து இருக்க முடியாது. நம் வீட்டில் மூலை முடுக்குகளில் ஒளிந்து கொண்டு சத்தம் எழுப்பும், 

பல்லிக்கும், அக்ஷய திருதியைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. ஒரு சுவாரசியமான தகவலை இந்த நன்னாளில் நாமும் தெரிந்து கொள்வோமா?

சித்திரை மாத வளர்பிறை திதியை தான் அட்சய திருதியையாக நாம் கொண்டாடுகின்றோம். இந்த அட்சய திருதியை நன்னாளில் மட்டும் இந்த பல்லிகள் யார் கண்ணுக்கும் படாமல் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று வாஸ்து பகவான் கட்டளையிட்டு உள்ளதாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஸ்து பகவானின் கட்டளைக்கிணங்க எல்லா பல்லிகளும் இன்று கண்ணுக்குத் தெரியாத ஒரு இடத்தில் போய் ஒளிந்து கொண்டிருக்கும்.

இதனால் வீட்டில் உள்ளவர்களால் இந்த பல்லியை இன்றைய தினம் மட்டும் காண முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி உங்கள் கண்களில், அந்த பல்லி நீங்கள் பார்த்து விட்டால், நிச்சயமாக உங்களது ஏழேழு ஜன்மத்து பாவமும், உங்களை பிடித்த பீடையும், தரித்திரம் விலகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பல்லியை உங்களுடைய கண்களுக்கு காட்ட வேண்டும் என்று அந்த வாஸ்து பகவானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நாம் செய்த பாவத்திற்கான தண்டனை குறைய வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டிக்கொண்டு, இன்றைய தினம் பல்லியை தரிசனம் செய்யப் பாருங்கள்.

அந்த பல்லியை கண்டவுடன், தலை வணங்கி ஒரு நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். அதுவே போதும். நம்முடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க நம்மை பிடித்த பீடை விலக, ஒரு அற்புதமான சுலபமான தகவலை தான் இன்று நாம் தெரிந்து கொண்டோம். இதுவே ஒரு பெரிய பாக்கியம்.


கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.