மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 46 ஆவது ஆண்டு நினைவேந்தல்!!


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 46 ஆவது சிரார்த்த தினமான இன்று புதன்கிழமை (26) மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவு பூங்காவில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலைக்கு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை தலைவர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன் மற்றும் முன்னாள் மட்டு மாநகரசபை முதல்வர் தி. சரவணபவன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டு அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.






கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.