உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிக்கிண்ணத்தை அர்ஜென்டினா அணி தான் வெல்லும் என ஆமையும், கழுகும் கணித்துள்ளது.
உலகக் கிண்ண தொடர்களின் போது எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதை உயிரினங்கள் கணித்து வருவது பல ஆண்டுகளாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் பிரபலமான உயிரினமான அக்டோபஸ் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கிண்ண தொடரின் இறுதிக்கிண்ணத்தை ஸ்பெயின் தான் வெல்லும் என கணித்துள்ளது.
இதன்பின்னர் உயிரினங்கள் உலகக் கிண்ண போட்டிகளின் போது வெற்றிபெறும் அணியை கணிப்பது என்பது வைரலானது.
அந்த வகையில் இன்று நடக்கவுள்ள அர்ஜென்டினா, பிரான்ஸ் இடையிலான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பதை கழுகு மற்றும் ஆமை கணித்த வீடியோ வைரலாகியுள்ளது.
ராக்கி என்ற ஆமை கணிப்பின் படி அர்ஜென்டினா தான் ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரோமியோ என்ற கழுகும் அர்ஜென்டினா தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.