பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு..!

 2021 உயர்கல்வி பரீட்சை தொடர்பான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி, 2021 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் WWW.ugc.ac.lk இணையத்தளத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வரலாற்றிலேயே முதற்தடவையாக விண்ணப்பபடிவங்கள் கோரப்பட்டு மிகவும் குறுகிய காலத்துக்குள் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை அனுமதிக்கும் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

இதன்படி பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு இரண்டு மாதம் ஒரு வாரத்துக்குள் வெட்டுப்புள்ளிகளை வெளியிட பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தப் பரீட்சைக்குரிய பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ள தாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.


க.பொ. த உயர் தர 2021(2022) பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் 2,36,035 பேரும், தனியார் பரிட்சார்த்திகள் 36,647 பேருமென மொத்தம் 2,72,682 பேரும் தோற்றி இருந்தனர். இதில் 1,71,497 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக குறைந்த பட்ச தகுதிகளை பெற்றிருந்தனர்.

42, 519 மாணவர்கள் அனுமதி

அவ்வாறு பல்கலைக்கழக அனுமதிக்காக குறைந்தபட்ச தகுதியைப் பெற்றுக் கொண்டவர்களில்1,49,946 பேர் பாடசாலை மாணவர்களாவர்.

இவர்களில் 21,551 தனியார் பரீட் சார்த்திகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இப்பரீட்சை முடிவுகளின் படி அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 42, 519 மாணவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.


Powered by Blogger.