கட்டணம் செலுத்தாத வீடுகளில் மின் இணைப்பைத் துண்டிக்க மாட்டோம்! - வெளியான அதிரடி அறிவிப்பு

 அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தினால் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத மக்களின் வீடுகளில் மின் இணைப்பைத் துண்டிக்கும் பணிகளில் ஈடுபடுவதில்லை என சிலோன் பவர் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிடுகின்றார்.



கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

இவ்வாறு மக்களை மேலும் ஒடுக்கி மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தால் அதனை முறியடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒட்டுமொத்த மக்களுடன் இணைந்து முன்னெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.


Powered by Blogger.