படப்பிடிப்பு தளத்திலேயே இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் உறைந்த சக நடிகர்கள்

 பிரபல இந்தி நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இளம் நடிகை துனிஷா சர்மா

ஃபிட்டூர், பார் பார் தேகோ, கஹானி 2, தபாங் 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் துனிஷா சர்மா(20). தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான இவர், அலிபாபா தாஸ்தென் - இ - கபுல் என்ற இணைய தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்த நிலையில், துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்தில் தனது காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்தவுடன் தனது அறைக்கு சென்றுள்ளார்.

விபரீத முடிவு

அறையின் கதவு வெகுநேரமாக மூடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த கதாநாயகன் ஷஷென் முகமது கான், ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது துனிஷா சர்மா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷஷென் மற்றும் ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

21வது பிறந்தநாளுக்கு முன்பே நிகழ்ந்த சோகம்

அங்கு துனிஷா சர்மாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த மாதம் 4ஆம் திகதி தனது 21வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் துனிஷா சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Powered by Blogger.