அடுத்த 36 மணித்தியாலங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

 மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.



எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் காலப் பகுதியில் கடும் காற்றுடனான வானிலை மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளமையினால், மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Powered by Blogger.