வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவி சர்வதேச போட்டியில் சாதனை!


மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பாடசாலை மாணவி செல்வி சுமேதா மதிவண்ணன் அவர்கள் சர்வதேச தாய் மொழித்தின போட்டியில் (International Mother Language Day 2020) ஆங்கில கவிதை புனைதல் போட்டியில் முதலாவது இடத்தை பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.இதற்கான சான்றிதழை கௌரவ பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து சுதந்திர சதுக்கத்தில் பெற்றுக்கொண்டார்.இவர் தேசிய மட்டங்களில் இடம்பெற்ற சமூக விஞ்ஞான போட்டி, ஆங்கில தின போட்டி, Energy Education விவாத போட்டி என்பவற்றில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இவர் பிராணாம புலமைப்பரிசிலையும், புத்தாக்க போட்டியில் வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளார்.


இவர் கோட்டை கல்லாற்றை சேர்ந்த எந்திரி கோ.மதிவண்ணன், சிவமித்ரா ஆகியோரின் புதல்வியாவார்.
Powered by Blogger.