ஜனாதிபதியின் சிவராத்திரி வாழ்த்துச் செய்தி



வாழ்த்துச் செய்தி


உலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதம் இருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி நின கொண்டாட்டத்தில் இலங்கைவாழ் இந்துக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்துகொள்கின்றேன்.






இந்து சமய பஞ்சாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தில் மேற்கொள்ளப்படும் - பல்வேறு சமயக் கிரியைகளின் மூலம் துர்க்குணங்களில் இருந்து விலகி உளத்தாய்மையை பெற்றுக்கொள்ள முடியுமென்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.


பல்வேறு சிக்கல்கள், முரண்பாடுகளுக்கு மத்தியில் முன்னோக்கிச் செல்லும் இன்றைய உலகில், மனிதனுக்கு உள அமைதியை தருவது சமயமாகும். எமது சகோதர தமிழ் சமூகத்தினர் உட்பட அனைத்து இலங்கையர்களும் புத்தெழுச்சியுடன் புதியதோர் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புடன் இருக்கின்ற இச்சூழ்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் சமய நல்லிணக்கத்துடன் நாட்டின் அனைத்து இனங்களும் தமது தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பதையிட்டு நாட்டின் தலைவர் என்ற வகையில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.


இப்புனித மகா சிவராத்திரி தினத்தில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி அனைவரினதும் ஆன்மிகத்தை ஒளி பெறச்செய்யட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.


கோட்டாபய ராஜபக்ஷ




2020 பெப்ரவரி 20ஆம் திகதி








கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.