துப்பாக்கிசூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்தமிழர் தாயகப்பகுதி ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் தமிழர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஒமனியாமடு பகுதியைச் சேர்ந்த மயில்வாகனம் பிரசாந்தன் ( வயது 38 ) என்பரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.


மட்டக்களப்பு புனானை ஒமனியாமடு காட்டுப்பகுதியிலிருந்தே இவர் கடந்த வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த நபர் கடந்த 25 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஒமனியாமடு காட்டுப்பகுதியில் தன்னைத்தானே சொட்கண் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன் சொட்கண் துப்பாக்கி ஒன்றையும் சடலத்துக்கு அருகில் இருந்து மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .


மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழசை்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.Powered by Blogger.