தேர்தலில் வெற்றிபெற விசேட பூசை செய்த கூட்டமைப்பினர்


திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் விஷேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற இந்த வழிபாட்டில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துக் கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் சிறந்த முறையில் இடம்பெற வேண்டுமெனவும், நாட்டுக்கும், மக்களுக்கும் சிறந்த எதிர்காலம் எதிர்பார்த்த நிலையில் அமைய வேண்டியும் குறித்த வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழிபாட்டில் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் மற்றும் தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் குகதாசன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


Powered by Blogger.