அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் பாராளுமன்றத்தில் அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்! டிரம்புக்கு ‘கடுமையான பதிலடி’






அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் பாராளுமன்றத்தில் அதிரடி தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.





ஈரானிய பாராளுமன்றம் செவ்வாயன்று அமெரிக்காவுக்கு எதிராக பழிவாங்குவதற்கான காரணத்தை வகுக்க ‘கடுமையான பதிலடி’ என்ற அழைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது.





அமெரிக்க இராணுவம் மற்றும் பென்டகனை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிப்பதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக ஈரான் பாராளுமன்றம் வாக்களித்தது.








ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி-யை பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 23, 2019 அன்று அமெரிக்காவின் மத்திய படையான CENTCOM-ஐ பயங்கரவாத அமைப்பாக ஈரான் அறிவித்து மசோதாவை நிறைவேற்றியது.





தற்போது, அதே மசோதாவில் மூன்று அவசர தீர்மானங்களை நிறைவேற்றி மாற்றியமைத்துள்ளது ஈரான்.





ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வில் பேசியதாவது, முந்தைய அமெரிக்க எதிர்ப்பு சட்டத்தில், CENTCOM-ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.







இன்று டிசம்பர் 7ம் திகதி, தளபதி சுலைமானியை படுகொலை செய்த அமெரிக்காவின் கொடூரமான நடவடிக்கையைத் தொடர்ந்து, இதற்கு அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், முந்தைய சட்டத்தை நாங்கள் மாற்றியமைக்கிறோம்.





பென்டகனின் அனைத்து உறுப்பினர்களும், தளபதிகள், முகவர்கள் மற்றும் ஜெனரல் சுலைமானியின் தியாகத்திற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்படுகிறார்கள். இதை அனைத்து ஈரானிய தேசமும் ஆதரிக்கிறது என சபாநாயகர் குறிப்பிட்டார்.





மேலும் மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தின் படி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஈரானின் தேசிய மேம்பாட்டு நிதியிலிருந்து ஐ.ஆர்.ஜி.சி குட்ஸ் படையினருக்கு 200 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என்றும் சபாநாயகர் லரிஜானி கூறினார்.





நிதியை வழங்க தலைவரின் அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஒப்புதலைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.



கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.