தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை நிரூபித்துக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய!தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த வகையில், இந்த தைப்பொங்கல் மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளதுடன், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக மீன்பிடி நீர்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பு -முகத்துவாரம் ஸ்ரீவெங்கடேஷ்வர் மஹா விஷ்ணு கோவிலில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


இதன்பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர்,


“தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அந்த வகையில், இந்த தைப்பொங்கல் மகிழ்ச்சி கரமானதாக அமைந்துள்ளதுடன், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.


தோட்டத்தொழிலாளர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வுகோரி போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக எங்களுடைய அரசாங்கம் 1000 ரூபா சம்பள உயர்வை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியிருக்கின்றார்.


ஆகவே , கூடிய விரைவில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கும் எமது அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்கும்” என்றார்.Powered by Blogger.