பல தடைகளைத் தாண்டி மட்டு அரச அதிபரானார் கலாமதி

நாடளாவிய
ரீதியில் நடைபெற்றுவரும் அரச அதிபர் இட மாற்றத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு
மாவட்டத்தின் அரச அதிபராக பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அரசாங்க அதிபராகுவதற்குரிய
தகுதியுடைய திருமதி கலாமதி பத்மராஜா
 அவர்களுக்கு நேற்று வழங்கப்படவிருந்த நியமனம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.மண்முனை
வடக்கு பிரதேச செயலாளராகவும் பின்பு மாகாணசபையின் உயர் பதவிகளையும் வகித்தவரான
கலாமதி பத்மராஜா
 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டாம். முஸ்லீம் ஒருவரை நியமித்தாலும் பறவாயில்லை  இவரை நியமிக்க வேண்டாம் என ஒவ்வொரு அமைச்சு அலுவலகமாக சென்று இவரை நியமித்தால்
தான் மாவட்ட அபிவிருத்திக்குழுவிலிருந்து
 விலகுவேன், வரும் தேர்தலில் மொட்டுச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என
மன்றாடி
 இறுதியில் அந்த நியமனதினை தற்காலிகமாக
தடுத்திருந்தார் முன்னாள் தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பின்பு அரசுக்கு ஆதரவு
 
வழங்கியவருமான வியாளேந்திரன் MP .

மட்டக்களப்பு
நிலைமைகளையும், அரசியல் நிலைமைகளையும் நன்கு ஆராய்ந்த ஜனாதிபதி கோட்டாபஜ ராஜபக்ஷ அவர்களும்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் பசில் ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய கலாமதி பத்மராஜாவுக்கு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தை வழங்கியுள்ளனர்.

மட்டு அரச அதிபர்
கலாமதி பத்மராஜாவுக்கு எமது வாழ்த்துக்கள்


Powered by Blogger.