ஹிஸ்புல்லா தொடர்பில் உத்தரவிட்ட ஜனாதிபதி கலக்கத்தில் ஹிஸ்புல்லா


பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்த ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைகழகத்தை அரச பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.குறித்த உத்தரவை ஜனாதிபதி நேற்றையதினம் உயர்கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளை நேற்று சந்தித்தபோதே ஜனாதிபதி இதனை பணித்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சவூதி அரேபியாவின் அமைப்புக்களின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் மட்டக்களப்பில் ஷர்யா பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

குறித்த பல்கலைக்கழகத்திற்கு எதிராக பலவழிகளிலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுவந்த நிலையில் அதனை அரசுடமையாக்குவதற்கு இடமளிக்க முடியாது என ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார்.Powered by Blogger.