ஜனவரி முதல்வாரத்தில் ஒரு இலட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு






அடுத்து வருடத்தில் ஆரம்பத்தில் குறைந்த வருமானம் மற்றும் கல்வி மட்டம் குறைந்த ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது.


எதிர்வரும் ஜனவரி மாதத்தின் ஆரப்ப பகுதியில் அவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பினை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என, அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.










நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.





தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,


அதற்கமைய கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற தவறிய 15 தொடக்கம் 30 வயதிற்கும் இடைப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவைப் பெறும் இளைஞர் யுவதிகள் தொழிலில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.





இவர்களுக்கு 30 ஆயிரத்திற்கும் 35 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட சம்பளத்துடனான வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.


அத்துடன் அவர்கள நிரந்தர சேவையில் அமர்த்தப்படுவார்கள். எனினும் இவர்கள் ஓய்வூதிய கொடுப்பனவைக் கொண்டிருக்க மாட்டார்கள்.


எப்படியிருப்பினும் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட தொழில் ரீதியிலான உரிமைகளைக் கொண்டிருப்பார்கள்





குறித்த இளைஞர், யுவதிகள் தனியார் மற்றும் அரசாங்க துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சிகளின் பின்னர் டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்பு படை போன்ற துறைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.