கம்பெரலிய யுத்தமும் நடுத்தெருவுக்கு வந்த மக்களும்






சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. வீதிகளால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளன. 







எந்த ஒரு காலமும் நீரில் மூழ்காத இடங்கள்கூட இந்த மழைக்கு மூழ்கியுள்ளன. கம்பரலிய யுத்தம் என்று மக்களை மடையர்களாக்க நினைத்த திட்டத்தின் வெளிப்பாடுதான் இது.





ஒழுங்கான திட்டமிடல் இல்லாமல் வடிகான்கள் அமைக்கப்படாமல் வீதிகளைப் போட்டுவிட்டனர். அதனால் மழைநீர் வடிந்தோட முடியாமல் மக்கள் அல்லல்படுகின்றனர். பலரது வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.





பல வீதிகளை உடைத்தே நீரினை வெளியேற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. அதிலும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனின் சிபார்சில் கொடுக்கப்பட்ட வீதிகளே மிக மோசமான நிலையை தோற்றுவித்துள்ளன. தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு வீதி அமைப்பு வேலைகளை சிறிநேசன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.