ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர்! பச்சைக்கொடி காட்டினார் ரணில்சிங்கள பௌத்த கொள்கையின் அடிப்படையில் வளர்ந்த புதிய தலைவர் மற்றும் புதிய கொள்கையுடன் புதிய ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டியுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்


மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்தைப் பெற்ற புதிய ஐக்கிய தேசியக் கட்சியாக முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது.


தமது கட்சிக்கு சிங்கள பௌத்தத்துவ அடிப்படைகள் இல்லாமல் போனமை விசேடமாக கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டதில்லை. இதற்காக எவரின் மீதும் விரல் நீட்டாமல் தவறைச் சரி செய்துகொண்டு முன்னோக்கிச் செல்லவேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


எதிர்காலத்தை சிந்தித்து புதிய தலைவர் ஒருவரை உருவாக்கி அவரிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்Powered by Blogger.