ஆரையம்பதியில் எமது மூதாதயர்கள் வாழ்ந்தார்கள் என்பது நேற்று முளைத்த காளான் பிரசாந்தனுக்குத் தெரிந்திருக்காது - அமீர் அலி
ஆரையம்பதியில் எமது மூதாதயர்கள் வாழ்ந்தார்கள் என்பது
நேற்று முளைத்த காளான் பிரசாந்தனுக்கு எங்கே தெரியப் போகிறது என்று அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.
ஏறாவூர் பிரதேசத்தில்
இடம்பெற்ற சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான கூட்டம் ஒன்றில் பேசும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசுகையில்….
ஆரையம்பதி முஸ்லிம்களின்
பூர்விக நிலம் என்று அன்று நான் கூறியதை தூக்கிப்பிடித்து பிரசாந்தன் ஒரு மேடையிலே
எனக்கு பேசியிருக்கிறார்.
இந்த ஆரையம்பதி
எமது முன்னோர்கள், பாட்டன், முப்பாட்டன் வாழ்ந்த பூமி முஸ்லிம்களை புலிகள் துரத்தி
அடித்துவிட்டு தமிழர்களைக் குடியேற்றினார்கள். இது எங்கே நேற்று முளைத்த காளான் பிரசாந்தனுக்குத்
தெரியப்போகிறது.
எமது வரலாறுகளையும்,
ஆதாரங்களையும் நாம் கொண்டு வந்தால் இந்த பிரசாந்தன் நடுத்தெருவில்தான் நிற்கவேண்டும்.
விரைவிலே அவர்களை நடுத்தெருவுக்கு நாம் கொண்டு செல்வோம் என்றார்.